E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0855/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

    1. 855/ '19

      கௌரவ விமலவீர திசாநாயக்க,— சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) காட்டு யானைகளால் மனித உயிர்களும் ஆதனங்களும் அழிக்கப்படுதல் பரவலாக இடம்பெறுகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி உயிர்களும் ஆதனங்களும் அழிக்கப்படுதல் காரணமாக குடும்பங்கள் அநாதரவான நிலைக்கும் நிர்க்கதி நிலைக்கும் உள்ளாகின்றனவென்பதையும்;

      (iii) இவ்விதமாக அழிக்கப்படுகின்ற உயிர்களுக்கும் ஆதனங்களுக்கும் இழப்பீடு செலுத்துதல் தொடர்ச்சியாக தாமதித்து வருகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி இழப்பீட்டுத் தொகைளை துரிதமாக செலுத்த நடவடிக்கை எடுப்பாரா;

      (ii) ஆமெனில் அத்திகதி யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks