பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0883/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.

    1. 883/ '19

      கௌரவ லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை அதிபர் சேவையின் III ஆம் வகுப்பிற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சையானது 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) 2015 ஆம் ஆண்டு மார்ச் 14, 15, 16, 17, 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

      (iii) மேற்படி நேர்முகப் பரீட்சையின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iv) மேற்படி நியமனங்களுக்கான பெயர்ப் பட்டியல் இச்சபைக்கு சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;

      (v) மேற்படி நேர்முகப் பரீட்சைகளின் மூலம் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (vi) அதில் 43 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிவாரா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மேல்முறையீட்டு செய்த 1487 இலக்கமுடைய நோ்முகப்பரீட்சைக்குத் தோற்றிய திருமதி எஸ்.கே.கே. குணத்திலக்க இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவில்லை என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) அவர் இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாதமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (iii) தவறுதலாக நேர்முகப் பரீட்சைக்கு அவர் அழைக்கப்படவில்லை எனில் அவரை மீண்டும் நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து தகைமைகளை பூர்த்தி செய்திருந்தால் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-05-07

கேட்டவர்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-06

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks