E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0930/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

    1. 930/ '19

      கௌரவ முஹம்மது நசீர்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அம்பாறை மாவட்டத்தில் மகாவலி ''சீ'' வலயத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தேசிய பாடசலையாகிய அம்/தெஹிஅத்தகண்டிய மத்திய மகா வித்தியாலயம் 3000 இற்கும் அதிகமான மாணவர்களும் சுமார் 150 கல்விசார், கல்விசாரா பணியாளர்களும் இருக்கின்றதொரு பாடசாலை என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் அப்பாடசாலையின் பௌதீக மற்றும் மனித வளங்கள் தேவைப்பாட்டினைப் பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் ஆய்வொன்று நடாத்தப்பட்டதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அவ்வறிக்கைக்கு அமைவாக அப்பாடசாலையின் தேவைப்பாடுக அடையாளம் காணுதல் மற்றும் பாடசாலை முறைமையின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யும் செயற்பாடு தொடர்பான முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா ?

      (ஆ) மேலே (அ)(ii) இற்கு அமைவாக அல்லது கஷ்டப்பிரதேச கிராமங்களில் வசிக்கின்ற வறிய பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி அல்லது அப்பாடசாலையின் முன்னேற்றத்தின் பொருட்டு நிரல் அமைச்சின் மூலமாக விஷேட கவனம் செலுத்தப்படுமா என்பதையும் அவர் அறியத்தருவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-03

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-03

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks