E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0932/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

    1. 932/ '19

      கௌரவ முஹம்மது நசீர்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி மாவட்டத்தில், வழி இலக்கம் 595 ஊடாக பங்கொல்லாமடவில் இருந்து அக்குறணை, கண்டி வழியாக மஹரகம மற்றும் கொழும்பை வந்தடையும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று நாள்தோறும் அதிகாலை 4.15 இற்கு சேவையில் ஈடுபட்டிருந்ததை அறிவாரா என்பதனையும்;

      (ii) மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள் உட்பட பொது மக்களது நலன் கருதி சேவையில் ஈடுபடுத்தியிருந்த அந்த பேருந்து சேவையை நிறுத்துவதற்கு கொள்கைரீதியான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) குறித்த பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்பட்ட இறுதித் திகதி யாது என்பதையும்;

      (iv) மேற்படி பேருந்து சேவையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks