E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0933/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

    1. 933/ '19

      கௌரவ முஹம்மது நசீர்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) திரு. ஏ.எச்.எம். பைருக் கொழும்பு, தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் சேவையில் ஈடுபட்டிருந்து மேமா/கொ/வலய/ஆநி/7 என்ற இலக்கமுடைய 2006.06.30 ஆம் திகதிய கடிதத்தின் மூலமாக 1989.03.31 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஓய்வுபெறச் செய்விக்கப்பட்ட உதவி ஆசிரியர் என்பதனை அறிவாரா;

      (ii) மேற்படி திகதியிலிருந்து ஓய்வுபெறச் செய்விக்கப்பட்ட பைருக் அவர்களுக்கு 1997.01.15 ஆம் திகதியிலிருந்து ஓய்வூதியக் கொடுப்பனவிற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் இதுவரையில் ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்காது தாமதமடையச் செய்தமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) 25 வருட காலமாக ஆசிரிய சேவையில் ஈடுபட்டிருந்து தற்போது வயோதிப நிலையில் உள்ள பைருக் அவர்களுக்கு உரித்தான ஓய்வூதிய கொடுப்பனவை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்காக கல்வித் திணைக்களத்தினூடாக உரிய கோப்புக்களை ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் ஓய்வூதியத்தை தாமதிக்காது பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ முஹம்மது நசீர், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks