பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
949/ '19
கௌரவ முஹம்மது நசீர்,— தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹஜ் யாத்திரைக்காக பக்தர்களை அழைத்துச் செல்லும் பொருட்டு புதிய முகவர்கள் / நிறுவனங்களைத் தெரிவு செய்யும்போது ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்த உம்ரா உரிமம் பெற்றவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் முன்னுரிமையளிக்கும் ஒரு நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதாக உங்கள் அமைச்சினால் / முஸ்லிம் மத மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், ஹஜ் யாத்திரைக்கென பக்தர்களை அழைத்துச் செல்லும்பொருட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள் மற்றும் நிறுவனங்களில் பக்தர்களிடமிருந்து அறவிடும் பணம் தொடர்பில் குறைந்த கேட்பு விலையை முன்வைத்திருந்த "GI Travels" (பதிவிலக்கம் MRCA/umra/041/2018) நிறுவனத்திற்கு அதற்கான அங்கீகாரத்தை வழங்க தவறியதற்கான காரணம் யாது என்பதையும்;
(iii) ஐந்து வருடங்களுக்கும் மேலாக உம்ரா உரிமத்தைக் கொண்டுள்ள மற்றும் திருப்திகரமாக பொறுப்பினை நிறைவேற்றி வருவதுடன் இவ்விடயம் தொடர்பில் கூடுதலான ஆற்றலைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் குறைந்த செலவில் ஹஜ் பக்தர்களை மக்கா நகருக்கு அழைத்துச் செல்ல முன்வந்துள்ளதால் மேற்படி முகவர் நிறுவனத்துக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2019-07-12
கேட்டவர்
கௌரவ முஹம்மது நசீர், பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks