பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
965/ '19
கௌரவ பிமல் ரத்னாயக்க,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம், ரத்மல்கஹவெவ, நெலுகொல்லாகடவில் வதியும் ஜனாப் எம்.எம். ஜவுபர் இலங்கை வங்கியின் கஹட்டகஸ்திகிலிய கிளையில் 706863 ஆம் இலக்கமுடைய கணக்கினைத் திறந்து வெளிநாடு சென்று 2006.06.01 தொடக்கம் 2012 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சம்பாதித்த 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையினை மேற்படி கணக்கில் வரவு வைத்துள்ளார் என்பதையும்;
(ii) 2012 டிசம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்து தனது கணக்கிலுள்ள பணத்தினை மீளப் பெற்றுக்கொள்வதற்காக ஜனாப். ஜவுபர் முயற்சித்த வேளையில் சுமார் 50 இலட்சம் ரூபா பணம் மோசடியான வகையில் வங்கியின் நிதி கவுண்டரில் இருந்தும் தன்னியக்க ரெலர் இயந்திரத்தின் (ATM) மூலமாகவும் மீளப்பெறப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பாக உடனடியாக வங்கிக்கு அறிவித்து தமது பணத்தினை மீளப் பெற்றுத் தருமாறு கோரிய போதிலும் இதுவரை பணம் மீளச் செலுத்தப்படவில்லையென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஜனாப் ஜவுபர் அவர்களுக்கு இப்பணத்தினையும் அதற்கான வட்டியையும் மீளச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(ii) பணம் செலுத்தப்படுமானால் அது எப்போது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2019-08-22
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
3
பதில் தேதி
2019-08-22
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks