E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0966/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 966/ '19

      கெளரவ பிமல் ரத்நாயக்க,— நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசினால் 2037/16 ஆம் இலக்க, 2017.09.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது என்பதையும்;

      (ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1)ஆம் பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்ட கட்டளையின் பிரகாரம் றுகுணு பல்கலைக்கழகத்தில் இணை சுகாதாரப் பீடமொன்றை அமைப்பதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) அதற்கான கட்டடமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி இணை சுகாதாரப் பீடத்தை அமைப்பதற்காக அமைச்சிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும்;

      (iii) அதன்படி, நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-23

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks