E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0978/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 978/ '19

      கௌரவ இஷாக் ரஹூமான்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) மத்திய மாகாணத்துக்குரிய மாத்தளை மாவட்டத்தின் கலேவெல நகரில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் திணைக்களத்தினால் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட கட்டடமொன்றிலே இயங்குகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி கட்டடமானது, கலேவெல, நபடகஹவத்த, மஸ்ஜிதுல் பலாஹ் என்ற முஸ்லிம் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியிலேயே அமைந்துள்ளதென்பதையும்;

      (iii) இக் கட்டடத்துடன் கூடிய காணியே மேற்படி பள்ளவாசலுக்குள்ள ஒரே சொத்து என்பதையும்;

      (iv) மேற்படி சொத்தினை பள்ளவாசலுக்கு மீளப் பெறுவதற்கு பள்ளிவாசலின் சமயப் பெரியார்களினால் அவ்வப்போது பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும்;

      (v) இதற்கான மாற்றுத்திட்டமாக பொலிஸ் நிலையத்தை அமைப்பதற்கு கலேவெல நகரில், பத்கொலகொல்ல வீதியில் ஒன்றரை ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அவ்வாறு காணி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும், குறித்த பொலிஸ் நிலையத்தை அக் காணியில் நிர்மாணிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி இப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணியையும் கட்டடத்தையும் முஸ்லிம் பள்ளிவாசலுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்,-

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-06

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சரும்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-09-06

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks