E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

0980/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 980/'19

      கௌரவ இஷாக் ரஹூமான்,— போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரையான புகையிரதப் பாதையில் கலாவெவ புகையிரத நிலையம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் பயன்படுத்துகின்ற ஒரு புகையிரத நிலையம் என்பதையும்;

      (ii) பயணிகளுக்கு புகையிரத நிலையத்திலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசிப்பதற்குள்ள சுமார் 300 மீற்றர் நீளமான வீதி மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றதென்பதையும்;

      (iii) இக் காரணத்தினால் புகையிரதப் பயணிகள் அவ் வீதியை பயன்படுத்தாமல் ஆபத்தான முறையில் புகையிரத மேடையிலிருந்து புகையிரதப் பாதை ஊடாக பயணித்து பிரதான வீதிக்கு பிரவேசிக்கையில் விபத்துக்கள் நேரக்கூடும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) சுமார் 300 மீற்றர் தூர இக் குறும் வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-10-23

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks