E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1023/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

    1. 1023/ '19

      கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) கடந்த 5 ஆண்டுகளுக்குள்,

      (i) மதுவரி சட்டத்தின் 58 "அ" பிரிவின் கீழ் மதுவரி அலுவலர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கான நிதியத்திலிருந்து 818 அறிவித்தலை மீறி நிதிசார் முறைகேடுகளை மேற்கொள்ள அங்கீகாரம் வழங்கியவர் யாரென்பதையும்;

      (ii) அவ்வறிவித்தலின்படி வருமானம் சேகரிக்கின்ற சீருடை அணிகின்ற பணியாட்டொகுதியினரின் 1200 பேருக்கும் வருமானம் சேகரிக்காத சீருடை அணியாத 150 பேருக்கும் வருடாந்தம் செலுத்தப்பட்டுள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும் அப்பணம் நிதியத்தின் எத்தனை வீதம் என்பதையும்;

      (iii) அவ்வறிவித்தலின் (vi) இன் விசேட நிபந்தனைகளின் எல்லையை நெருங்காத சீருடை அணிகின்ற அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) 5.2 பிரிவினை மீறி, கடந்த 5 ஆண்டுக்குள் சட்டரீதியற்றவகையில் பணம் செலுத்த அங்கீகாரம் வழங்கியவர் யாரென்பதையும்;

      (ii) 7.2-ii இல், உரிமை கோரக்கூடிய பணியாட்டொகுதியினருக்கு கடந்த 5 ஆண்டுக்குள் எத்தனை அளவை மீறிய வெகுமதி செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்; அது மொத்த வெகுமதி நிதியத்தின் வருமானத்தில் எத்தனை வீதம் என்பதையும்;

      (iii) 77.2-ii இன் தரங்களுக்கு, உரித்தான பகுதியுடன் தொடர்புடைய பணத் தொகையைச் செலுத்தி, எஞ்சியதை 5.2 இன் கீழ் சட்டரீதியற்ற முறையில் வரவுவைத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) மேற்படி சட்டவிரோதமான சமநிலையற்ற பணம் செலுத்தல் தொடர்பாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-09-05

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks