E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1028/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

    1. 1028/ '19

      கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 இல் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இலக்கம் 294 மற்றும் 295 என்பவற்றின் பிரகாரம் கொழும்பு பங்குச் சந்தையில் டொலர் பட்டியலிடப்படுவதற்காக வெளிநாட்டுக் கம்பனிகளை ஊக்குவிப்பதன் பொருட்டு பின்பற்றப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (ii) முன்மொழிவு இலக்கம் 295 இன் பிரகாரம் கொழும்பு பங்குச் சந்தையின் மூலதனவாக்கம் ரூபா 28 பில்லியன் தொடக்கம் 50 பில்லியன் வரை உயர்த்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) பிரதம அமைச்சர் பல தடவைகளில் குறிப்பிட்டுள்ளவாறு "மூலதன இலாப வரியை" அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப் படுகின்றதா என்பதையும்;

      (iv) 2015 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட உயர் அனுகூல வரி பங்குச் சந்தை அபிவிருத்திக்கு பாரிய தடையாக அமைந்தது என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (v) கடந்த காலத்துக்கு ஏற்புடையவாறு வரி விதிப்பதற்கு கருதியுள்ளாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-08-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2019-08-23

பதில் அளித்தார்

கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks