E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1138/ 2019 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 1138/ '19

      கௌரவ கனக ஹேரத்,— கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடற்றொழில் துறையில் கடந்த 5 வருட காலப்பகுதியினுள் இலங்கை பெற்றுக்கொண்ட வருமானம் ஒவ்வொரு வருட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (ii) மீன் உற்பத்தி ஏற்றுமதி மூலமாக கடந்த 5 வருட காலப்பகுதியினுள் இலங்கை பெற்றுக்கொண்ட வருமானம் ஒவ்வொரு வருட அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      அவர் அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கையில் கடற்றொழில் துறையின் உற்பத்திகள் இந்நாட்டு நுகர்விற்கு போதுமானதாக இல்லையா என்பதையும்;

      (ii) இலங்கையில் மீன் உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

      (iii) ஆமெனில், அதற்கென வருடாந்தம் செய்யப்படுகின்ற செலவு யாதென்பதையும்;

      (iv) மீன் உற்பத்திகள் இறக்குமதி மூலமாக இந்நாட்டு கடற்றொழில் துறையானது பின்னடைவுக்கு இலக்காக மாட்டாதா என்பதையும்;

      (v) கடலால் சூழப்பட்டதொரு தீவாகிய எமது நாட்டில் கடற்றொழில் துறையை பாரிய அளவில் முன்னேற்றக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அவ்வாறு செய்யாதிருப்பது ஏனென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2019-10-23

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

3

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks