பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0848/ ’10
8.
கெளரவ விக்டர் அந்தனீ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) புத்தளம் மாவட்டடத்திலுள்ள ஒரேயொரு விவசாய பொருளாதார மத்திய நிலையம் கல்பிட்டி பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தின் நொரச்சோலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளதென்பதையும்,
(ii) கல்பிட்டி பிரதேச சபை ஆளுகைப் பிரதேசம் செழிப்பற்ற நீண்ட மணல் நிலப்பரப்பினால் மூடப்பட்டுள்ளதென்பதையும்,
(iii) மேற்படி பிரதேசத்தின் விவசாயிகள் யூரியா உட்பட இரசாயன பசளைகளை இட்டு செழிப்பாக்கிக் கொள்கின்ற மேற்படி செழிப்பற்ற மணல் நிலப்பரப்பில் இலங்கைக்குத் தேவையான சின்ன வெங்காயம்,மரக்கறி, பழங்களுக்கான தேவையில் சுமார் 1/3 ஐ மிக வெற்றிகரமாக உற்பத்தி செய்கின்றனர் என்பதையும்,
(iv) ஆயினும், நெற் செய்கைக்கான யூரியா உட்பட ஏனைய பசளைகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானியம் கல்பிட்டியில் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்பதையும்
அவர் அறிவாரா ?
(ஆ) நெற் செய்கைக்காக வழங்கப்படுகின்ற உர மானியத்தை செழிப்பற்ற நிலத்துடன் போராடுகின்ற மிகப் பின்தங்கிய கல்பிட்டி பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தின் மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் வழங்குவது பொருத்தமாகுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(இ) ஆமெனில், மேற்படி உர மானியத்தை கல்பிட்டி விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-04
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks