E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0012/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 12/2020

      கௌரவ புத்திக பத்திறண,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கஞ்சா போதைப்பொருள் சார்ந்த தவறுகள் காரணமாக கைதுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாது;

      (ii) அதிக எண்ணிக்கையிலான ஆட்கள் கைதுசெய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் யாவை;

      (iii) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் கஞ்சா தொடர்பிலான தவறுகள் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள அதிகரித்த போக்கானது சனத்தொகையில் ஒரு இலட்சம் மக்களில் எத்தனை பேர்;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) சட்டத்துக்கு முரணாக கஞ்சா செய்கை பண்ணப்பட்டுள்ளதாகக் கருத்தப்படுகின்ற மதிப்பீடு செய்யப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது;

      (ii) சட்டத்துக்கு முரணாக வருடமொன்றில் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகக் கருதப்படும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள கஞ்சாவின் அளவு எத்தனை கிலோ;

      (iii) கஞ்சா செய்கைபண்ணப்படல் மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா;

      (iv) ஆமெனில், குறிப்பிட் நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-02-06

பதில் அளித்தார்

கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks