பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0868/ ’10
கெளரவ திலிப் வெதஆரச்சி,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் களில் பெருந்தொகையானோர் கரைவலை மீன்பிடிக்கைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்பதையும், (ii) சுனாமி அனர்த்தம் காரணமாக அனைத்து கரைவலைகளும் அழிந்துபோயுள்ளன என்பதையும், (iii) சிறு மீன்பிடி வள்ளங்களை மீன்பிடிக்கைத் தொழிலுக்கு அறிமுகப் படுத்தியதன் மூலம் கரைவலை மீன்பிடிக்கைத்தொழில் பின்னடைவைச் சந்தித்துள்ளதென்பதையும், அவர் அறிவாரா? (ஆ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கரைவலை மீன்பிடிக் கைத்தொழில் மேற்கொள்ளப்படும் துறைமுகங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும், (ii) அந்த மீன்பிடித் துறைமுகங்கள் யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) (i) அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சுனாமி அனர்த்தத்திற்கு முன்னர் கரைவலை மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டிருந்த கரைவலைகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு துறைமுகங்களுக்கமைய வெவ்வேறாக யாவையென்பதையும், (ii) சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னர் மேற்படி மீன்பிடித் துறைமுகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கரைவலைகளின் எண்ணிக்கையும், கரைவலை மீனவர்களின் பெயர்களும் யாவையென்பதையும், (iii) சுனாமி அனர்த்தம் காரணமாக கரைவலைகளை இழந்த கரைவலை மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணங்கள் யாவையென்பதையும், (iv) அந்நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றவர்களின் பெயர்கள் யாவையென்பதையும், (v) மேற்படி நிவாரணங்கள் இதுவரை கிடைக்காத கரைவலை மீனவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-21
கேட்டவர்
கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks