E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0114/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 114/2020

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மற்றும் உள்ளக வர்த்தக, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாவனையாளர் நலனோம்புகை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்பதற்கு,—

      (அ) (i) உத்தியோகபூர்வ இலக்கம் 31470 கொண்ட பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் திரு.எல்.பீ.யூ. கருணாரத்ன 1990.11.04 ஆம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்து களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஆரம்பப் பயிற்சியை பெற்றுக்கொண்டிருக்கையில் 1991.03.04 ஆம் திகதி முதல் இவரின் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டதென்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) அந்நியமனத்தை இரத்து செய்தமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (iii) இவரின் மேன்முறையீட்டினை பரிசீலனை செய்து 1997.04.11 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வ இலக்கம் 12271 இன் கீழ் இவர் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார் என்பதை அறிவாரா என்பதையும்;

      (iv) இவரின் நியமனம் இரத்து செய்யப்பட்டிருந்த 06 வருட காலத்தில் இவருக்கு கிடைக்கவேண்டிய பதவியுயர்வு கிடைக்காமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (v) அக்காலம் தொடர்பில் அவருக்குரித்தான நிலுவைச் சம்பளத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (vi) இவரின் பிறந்த திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks