E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0008/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 08/2020 கௌரவ ஹேஷா விதானகே.- சுற்றுலா அமைச்சரைக் கேட்பதற்கு. - (அ) (i) பின்னவல யானை சரணாலயத்தை பார்வையிடுவதற்கு ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள் என்பதையும்; (ii) இந்த நிறுவனம் தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்துக்கு கூடிய வருமானத்தை ஈட்டித்தருகின்றது என்பதையும்; அவர் அறிவாரா? (ஆ) (i) 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் பின்னவல யானை சரணாயலத்தை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை, ஒவ்வொரு தவணை ரீதியாகவும் வெவ்வேறாகவும் யாதென்பதையும்; (ii) 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையில் இதனால் கிடைக்கப்பெற்றுள்ள வருமானம் ஒவ்வொரு வருடத்துக்கும் தவணைக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) பின்னவல யானை சரணாலயத்தை பார்வையிடுவதற்காக வருகை தரும் உல்லாசப்பயணிகளுக்கு யானைக் குட்டிகளுக்கு பால் ஊட்டுவதற்காக வழங்கப்பட்ட வாய்ப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதா என்பதையும்; (ii) ஆமெனில், அதற்கான காரணம் யாதென்பதையும்; (iii) யானைக் குட்டிகளுக்கு பால் ஊட்டுவதற்காக உல்லாசப்பயணிகளுக்கு வாய்ப்பு வழங்காமையினால் நிறுவனத்துக்கு வருடாந்தம் ஏற்படும் நட்டம் யாதென்பதையும்; (iv) இலங்கைக்கு பெறுமதிமிக்க ஒரு வளமான பின்னவல யானை சரணாலயத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்பதையும்; (v) ஆமெனில், குறிப்பிட்ட வேலைத்திட்டம் யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

சுற்றுலாத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-09-25

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks