E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0010/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. கௌரவ ஹேஷா விதானகே,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கி கட்டிடத் தொகுதி பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் 250,000 ஸ்ட்ரேலிங் பவுண் செலுத்தப்பட்டு அரசாங்கத்திற்கு சுவீகரிக்கப்பட்டதென்பதையும்;

      (ii) இதன் ஒரு பகுதி தற்சமயம் இந்தியாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதென்பதையும்;

      (iii) எஞ்சிய எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி எஞ்சிய எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதை விட வேறேதேனும் பயன்தரும் மாற்றுவழி இல்லையா என்பதையும்;

      (ii) இதன் ஒரு பகுதி தற்சமயம் இந்தியாவிற்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிராக மக்கள் அபிப்பிராயமொன்று நாட்டில் மேலோங்கி வருகின்றதென்பதால், அதற்கு செவிமடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iii) மேற்படி எண்ணெய் தாங்கிகளை கோரியுள்ள நாடுகளும் கோரிக்கைக்கான அடிப்படைகளும் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) சுதந்திரம் கிடைத்த பின்னர் ஆட்சி செய்த பல அரசாங்கங்களாலும் தற்போதைய அரசாங்கத்தினாலும் மேற்படி எண்ணெய் தாங்கிகள் பற்றி பல சந்தர்ப்பங்களில் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரங்கள் மற்றும் கருத்திட்ட அறிக்கைகள் இருக்குமாயின், அவற்றின் தலா ஒரு பிரதியை பெற்றுத்தர முடியுமா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-10-06

பதில் அளித்தார்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks