E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0021/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 21/2020

      கௌரவ ஹேஷா விதானகே,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில், 2015 ஆம் ஆண்டு முதல் கொலை செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை வருட ரீதியாக எவ்வளவு;

      (ii) மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;

      (iii) மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனைவி பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      (iv) உத்தியோகத்தர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் அவரது மனைவி, பிள்ளைகளது பாதுகாப்பு தொடர்பில் நடைமுறையிலுள்ள செயன்முறைகளை, மேம்படுத்துவதற்காக எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா;

      (v) ஆமெனில், அது மேற்கொள்ளப்படும் கால கட்டம் மற்றும் செயன்முறை யாது

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கையில் 2015 ஆம் ஆண்டு முதல் கொலை செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனைவி பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகளின் பெறுமதி யாது;

      (ii) அவர்களது விதவைகள் மற்றும் அநாதைகள் கொடுப்பனவு உரிய முறையில் செலுத்தப்பட்டுள்ளதா;

      என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) கொலை செய்யப்பட்டதன் பின்னர் —

      (i) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

      (ii) பதவி உயர்வு வழங்கப்படாதுள்ள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) பதவி உயர்வு வழங்கப்படாதுள்ள உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை;

      என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-04

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-04

பதில் அளித்தார்

கௌரவ சரத் வீரசேக்கர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks