E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0886/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. 0886/ ’10

       கெளரவ விஜித ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கம்பஹா மாவட்டடத்தின் பபிலியவல, பல்லேகமவில் அமைந்துள்ள,  மே.மா/கம்/ஆனந்தா வித்தியாலயத்தில், 2011 ஆம் ஆண்டின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்காக நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்ட திகதிகள் யாவை என்பதையும்,

      (ii) தகைமை பெற்ற மற்றும் தகைமை பெறாத விண்ணப்பதாரிகளினதும் பெயர், விலாசம், உரிய பிரிவு மற்றும் புள்ளிகள் யாவை என்பதை வெவ்வேறாகவும்

      அவர் இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா?

      (ஆ) (i) அமைச்சின் தொடர்புடைய சுற்றறிக்கையின் பிரகாரம், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல்களின் தகவல்களை உறுதி செய்வதற்கு கிராம உத்தியோகத்தரின் கடிதம் தேவைப்படுகின்றதா என்பதையும்,

      (ii) கிராம உத்தியோகத்தரின் கடிதம் காணப்படாமையினால் மட்டும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பரிசீலனை செய்வதை நிராகரிப்பதற்கு நேர்முகப் பரீட்சைக் குழுவுக்கு இயலுமா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) கிராம உத்தியோகத்தரின் கடிதத்தைக் கொண்டிராத சில விண்ணப்பதாரிகள், மீண்டும் நோ்முகப் பரீட்சைக்காக வேறொரு தினத்தில் அழைக்கப்பட்டிருந்தனர் என்பதையும்,

      (ii) இது குறித்து முறையான அறிவித்தல் செய்யப்படாமையினால், விண்ணப்பதாரி ஒருவர் அநீதிக்கு உள்ளானார் என்பதையும்

      அவர் ஏற்றுக் கொள்வாரா?

      (ஈ) (i) இதன்படி, அநீதிக்கு உள்ளான அவ்விண்ணப்பதாரிக்கு, நீதியை நிறைவேற்றி வைப்பதற்கும்,

      (ii) இது தொடர்பாக முறையான விசாரணையை நடத்துவதற்கும்

      அவர் நடவடிக்கை எடுப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-01-06

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks