E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0895/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

    1. 0895/ ’10

      கெளரவ ஹரின் பர்னாந்து,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      உலக மரபுரிமையான போகொடை ரஜமகா விஹாரையும் வரலாற்று சிறப்புமிக்க போகொடை மரப்பாலமும் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் கற்சுரங்மொன்று நடத்தப்பட்டு வருவதையும்,

      (ii) அதன் மூலம் மேற்படி புனித பிரதேசத்தை அண்டியதாக பாரிய சூழல் சீர்கேடுகள் ஏற்படுவதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி கற்சுரங்கத்தை பேணிக்கொண்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்,

      (ii) ஆமெனில், கலாசார பெறுமதிமிக்க மேற்படி பிரதேசத்தில் இடம்பெறும் சூழல் சீர்கேடுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யாவர் என்பதையும்,

      (iii) மேற்படி சூழல் சீர்கேட்டை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?


       

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ ஹரின் பிரனாந்து, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks