பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
248/2020
கௌரவ வேலு குமார்,— பிரதம அமைச்சரும் நிதி அமைச்சரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) கண்டி மாவட்டத்தில், தொலுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான லெவலன்ட் தோட்டத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் "உதா கம்மான வீட்டுத் திட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி திட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள —
(i) உதா கம்மான வீட்டுத்திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
வெவ்வேறாக அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) வீடொன்றை நிர்மாணிப்பதற்கு ஒவ்வொரு வீட்டுப்பயனாளிக்கும் —
(i) வழங்கப்படுவதாக இணக்கம் தெரிவிக்கப்பட்ட முழுத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) வழங்கப்படும் முழுத் தொகையில் கடன் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) வழங்கப்படும் முழுத் தொகையில் உதவித் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) இதுவரை வழங்கப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
வெவ்வேறாக அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) ஒவ்வொரு வீட்டுப் பயனாளிக்கும் உரித்தான நிலுவைத் தொகையினை வழங்கி, இத் திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-23
கேட்டவர்
கௌரவ வேலு குமார், பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-09-23
பதில் அளித்தார்
கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks