E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0253/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வேலு குமார், பா.உ.

    1. 253/2020

      கௌரவ வேலு குமார்,— பெருந்தோட்ட அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) போஹில்வத்த தோட்டம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குரிய தோட்டமொன்றாகுமென்பதனை அவர் அறிவாரா?

      (ஆ) (i) 1992 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்கள் மறுசீரமைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தோட்டத்திற்குச் சொந்தமாகவிருந்த பிரிவுகளின் (Divisions) எண்ணிக்கை யாவை;

      (ii) அப்பிரிவுகளின் பெயர்கள் யாவை;

      (iii) 2015 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட அல்லது மூடப்பட்ட பிரிவுகள் உள்ளனவா;

      (iv) ஆமெனில், அப்பிரிவுகளின் நிலப்பரப்பு யாது;

      என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) 1992 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியினுள் இந்த தோட்டத்திற்குச் சொந்தமான காணி, தொழிற்சாலை மற்றும் ஏனைய கட்டடங்கள் வெளித்தரப்பினர்களுக்கு அல்லது தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், குறித்த விபரங்கள் யாவை;

      (iii) இறுதியாக மேற்கொள்ளப்பட்ட காணிக் கணக்கெடுப்பிற்கு அமைவாக இத்தோட்டத்திலே பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலங்களின் அளவு மற்றும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாத நிலங்களின் அளவு யாவை;

      என்பதை வெவ்வேறாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks