E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0414/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ.

    1. 414/2020 கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) தற்போது, விளக்கமறியல் இல்லங்கள், சான்றுப்படுத்தப்பட்ட பாடசாலைகள், பொறுப்பேற்கும் இல்லங்கள் மற்றும் தடுப்புக்காவல் இல்லங்கள் ஆகியவற்றில் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாக அவர் சபைக்குத் தெரிவிப்பாரா? (ஆ) மேலே தரப்பட்ட ஒவ்வொரு நிறுவனங்கள் தொடர்பாக - (i) சிறுவர் ஒருவரின் தங்கியிருக்கும் சராசரி காலப்பகுதியையும்; (ii) சிறுவர் ஒருவருக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தின் அளவையும்; (iii) இணைக்கப்பட்டுள்ள பணியாளர்களின் வகுதிகள் மற்றும் அடிப்படைத் தகைமைகளையும்; (iv) பணியாட்டொகுதியினர் – சிறுவர் விகிதத்தினையும்; (v) சிறுவர்களை சமூகத்தினுள் மீள் ஒன்றிணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும்; (vi) இந்த சிறுவர்களின் நலன்களை உறுதிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும்; (vii) இந்த நிறுவனங்களைக் கண்காணிப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளையும்; அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா? (இ) 2015 முதல் 2019 வரையான காலப்பகுதி தொடர்பாக – (i) மேலே தரப்பட்ட நிறுவனங்கள் ஒவ்வொன்றினதும் அனுமதி பெற்ற மற்றும் விலகிச் சென்ற; (ii) விலகிச் சென்று வெற்றிகரமாகத் தொழில் பெற்று சமூகத்தில் பாதுகாப்பாக வாழுகின்ற; சிறுவர்களின் எண்ணிக்கையை அவர் மேலும் இச்சபைக்குத் தொிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-11-26

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks