பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
415/2020
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டம் தொடர்பாக நீதிமன்றங்களில் நிலுவையாக உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும்;
(ii) இளம் தவறாளிகள் மற்றும் சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையையும்;
(iii) முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நேரத்திலிருந்து வழக்குகளை முடிவுறுத்துவதற்கு சராசரியாக எடுக்கும் கால அளவினையும்;
(iv) தாமதத்துக்கான காரணங்கள் மற்றும் தாமதங்கள் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெறுகின்றன என்பதையும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளையும்;
(v) நீதிமன்றங்களுக்கு சிறுவர்களை கொண்டுசெல்வதற்கு நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளையும்;
(vi) சிறுவர்கள் நீதிமன்றங்களில் பிரசன்னமாக இருக்கும்போது, அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்பேணல் ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளையும்;
அவர் சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான இளம் தவறாளிகளின் —
(i) முடிவுற்ற வழக்குகளின் எண்ணிக்கையையும்;
(ii) முறைப்பாடு பதியப்பட்டதிலிருந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரையும் மற்றும் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதிலிருந்து விசாரணையின் முடிவு வரையுமான கால அளவையும்;
(iii) குற்றத் தீர்ப்புகள், விடுதலைகள் மற்றும் விடுவிப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கையையும்;
அவர் மேலும் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-05
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-05
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks