E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0418/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வருண லியனகே, பா.உ.

    1. 418/2020

      கௌரவ வருண லியனகே,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) களனிவெளி புகையிரத பாதையின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான அவிசாவளை தொடக்கம் ஓப்பநாயக்க வரையான பகுதியில், கடந்த ஐந்து தசாப்தங்களுக்குள் அங்கு வசிக்கும் மக்களுக்கு குத்தகை பத்திரம் அல்லது வேறேதேனும் சட்ட ரீதியான உரிமப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

      (ஆ) அவ்வாறு குத்தகைப் பத்திரம் அல்லது வேறேதேனும் உரிமப்பத்திரம் கிடைக்கப் பெறாத குடியிருப்பாளர்கள் மற்றும் வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு குத்தகைப் பத்திரம் வழங்கக்கூடிய இயலுமை இருக்கின்றதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) அவ்வாறில்லையெனில், அக்குடியிருப்பாளர்கள்/ வியாபார நிலைய உரிமையாளர்கள் —

      (i) தமது பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சோ்க்கும்போது;

      (ii) தமது வியாபார நடவடிக்கைகளுக்காக கடன்களைப் பெறும்போது;

      (iii) இயற்கை அனர்த்தங்களின்போது நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதில்;

      முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு எதிர்பார்க்கின்றாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றோல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ வருண லியனகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks