E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0449/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

    1. 449/2020

      கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சமூகத்தில் பெரும் கலந்துரையாடலுக்கு உள்ளான பெட்டிகலோ கெம்பஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாபிக்கப்பட்ட திகதி;

      (ii) அதற்காக பணம் செலவிட்ட ஆட்களினதும் நிறுவனங்களினதும் பெயர்கள்;

      (iii) அதன் ஆளுகைச் சபையில் இருந்தவர்களின் பெயர்கள்;

      (iv) மேற்படி நிறுவனத்தினால் நடத்தப்படவிருந்த பாடநெறிகளின் எண்ணிக்கை;

      (v) அப்பாடநெறிகளின் பெயர்கள்;

      யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி நிறுவனத்தில் நடத்தப்படவிருந்த பாடநெறிகளுக்கு மத்தியில் ஷரிஆ சட்டம் பற்றிய பாடநெறியொன்றும் உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதை அவர் அறிவாரா?

      (இ) மேற்படி நிறுவனம் தொடர்பில் நடப்பு அரசாங்கத்தின் நிலைப்பாடு யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-22

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-11-27

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks