E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0482/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 482/2020

      கெளரவ துஷாரா இந்துனில் அமரசேன,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதையும்;

      (ii) அதன் காரணமாக ஊழியர் சம்பளங்களைச் செலுத்துவது கூட கடினமாகியுள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தற்போது கடமையாற்றுகின்ற ஒட்டுமொத்த பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஊழியர்களுக்கு அரைச் சம்பளத்துடன் மூன்று மாத கால லீவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தை நிதி சார் அடிப்படையில் வலுவூட்டுவதற்கு அமைச்சு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் அவர் இச்சபைக்கு அறிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-22

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks