பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0492/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 492/2020 கௌரவ நிரோஷன் பெரேரா,— வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) புத்தளம் மாவட்டத்தில், வனாதவில்லுவ, எலுவன்குளம் பிரதேசத்தில் காடொன்று தீ வைக்கப்பட்டு துப்பரவு செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்தில் வெளியாகியமையை அவர் அறிவாரா? (ஆ) (i) மேற்படி அழிவு இடம்பெற்றுள்ள நிலப்பரப்பின் அளவு யாது? (ii) மேற்படி காணிகளின் உரிமை அரசாங்கம் வசமுள்ளதா? (iii) இன்றேல் மேற்படி காணிகளின் உரிமையினைக் கொண்டுள்ள தரப்பினர்கள் யார்? (iv) மேற்படி காடு அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்களா? (v) இந்நபர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை? என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-25

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-11-25

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks