E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0507/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

    1. 507/2020 கௌரவ ஜகத் குமார,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் அரசியல் அடிப்படையில் சமுர்த்தி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (ii) அதன் காரணமாக தகைமை பெற்ற பெருமளவிலானவர்களுக்கு மேற்படி உதவித்தொகை கிடைக்கவில்லையென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (iii) “சுபீட்சத்திற்கான நோக்கு” கொள்கை பிரகடனத்தின் படி சமுர்த்தி உதவித் தொகை கிடைக்கப் பெறாதவர்களுக்கு அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; (v) சமுர்த்தி உதவித் தொகையின் பெறுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (vi) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) (i) சமுர்த்தி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு எவ்வித பதவியுயர்வும் கிடைக்கவில்லையென ஏற்றுக்கொள்வாரா என்பதையும்; (ii) மேற்படி பதவியுயர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்; (iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) (i) தற்போதைய அரசாங்கத்தினால் சமுர்த்தி திட்டத்தினதும் சமுர்த்தி உத்தியோகத்தர்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்; (ii) மேற்படி அமைச்சரவை பத்திரங்கள் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட பிரச்சினைகள் யாவையென்பதையும்; (iii) இற்றைவரையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-11-26

பதில் அளித்தார்

கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks