E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0567/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ.

    1. 567/2020

      கெளரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மனிதர்களின் சருமத்தின் நிறத்தை மாற்றமடையச் செய்யும்/ பொழிவூட்டும் (வெள்ளை நிறமாக்கும்) ஔடதங்கள், மாத்திரைகள், தடுப்பூசிகள் மற்றும் களிம்பு (Cream) வகைகளில் பாரியளவில் இலங்கையினுள் விற்பனை செய்யப்படுவதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) அவ்வாறு விற்பனை செய்யப்படும் ஔடதங்களில் இறக்குமதி செய்யப்படும் ஔடதங்கள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளும் நிறுவனம்;

      (ii) மேற்படி ஒழுங்குபடுத்தலுக்கான சட்டம்

      யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி ஔடதங்களை விதப்புரை செய்யும் ஏராளமானவர்களுக்கு மருத்துவ விஞ்ஞான அறிவு இல்லையென்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) ஔடதங்களின் பாவனையால் பல்வேறு குறுகியகால ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளதா என்பதையும்;

      (iii) ஔடத பாவனையின் விளைவாக நீண்டகால மோசமான நோய் நிலைமைகள் ஏற்படக் கூடுமென வெளியாகும் மருத்துவக் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், அவ்வாறு கவனம் செலுத்தப்பட்ட வகையில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) (i) மேற்படி ஔடதங்களின் பாவனையினால் விளைவுகள் ஏற்படுமெனில், அதைத் தவிர்க்க வேண்டுமென்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ டப்ளியூ.எச்.எம். தர்மசேன, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-23

பதில் அளித்தார்

கௌரவ சன்ன ஜயசுமன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks