E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0582/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வேலு குமார், பா.உ.

    1. 582/2020

      கௌரவ வேலு குமார்,— பெருந்தோட்டத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசாங்கத்திற்குச் சொந்தமான தோட்டங்களை மறுசீரமைக்கும் திட்டமொன்று 1992 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டதென்பதையும்;

      (ii) அச்சந்தர்ப்பத்தில் 22 பிராந்திய தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கத் தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டதென்பதையும்;

      (iii) மேற்படி கம்பனிகளில் அநேகமான கம்பனிகள் தமது குத்தகை உரிமையினை வேறு நிறுவனங்களுக்கு தற்போது அளித்துள்ளன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) 1992 ஆம் ஆண்டில் அரச தோட்டங்களை குத்தகைக்குப் பெற்ற தோட்டக் கம்பனிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) தோட்டங்கள் குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட ஆரம்ப கம்பனிகளிடமிருந்து குத்தகை உரிமையினைப் பெற்றுக்கொண்டு தற்பொழுது தோட்டங்களை நிருவகிக்கின்ற நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) ஆரம்ப குத்தகைக்காரருக்கு அவர்கள் பெற்றுக்கொண்ட அரசாங்கத் தோட்டங்களை இதர நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ளனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி குத்தகை தொடர்பிலான சட்ட ஏற்பாடுகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-09

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-02-09

பதில் அளித்தார்

கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks