E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0606/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ.

    1. 606/2020

      கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பாக 2019.04.08 ஆம் திகதி பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிவித்தல் 2019 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர் தர) பரீட்சைக்கு (புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்கள்) தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கு அடிப்படையானதா என்பதையும்;

      (ii) பல்கலைக்கழக அனுமதிகளுக்கான மேலே சொல்லப்பட்ட முறைமையில் ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளனவா எனவும்;

      (iii) அவ்வாறெனில், அத்தகைய மாற்றத்துக்கான ஏதேனும் நியாயங்களையும்;

      (iv) அந்த மாற்றங்கள் எவ்வாறு உள்ளடக்கப்படும் என்பதையும்;

      (v) பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களிலிருந்து எத்தனை மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கான முறைமை மற்றும் அதன் பிரயோகத்தை உள்ளிட்ட பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பான எல்லா விபரங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிட முடியுமா என்பதையும்;

      (vi) இந்த விபரங்கள் ஏன் பகிரங்கமாக வெளியிடப்படுவதில்லை என்பதையும்;

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) (செல்வி) ஹரினி அமரசூரிய, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-08

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks