E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0757/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

    1. 757/2020

      கௌரவ அமரகீர்த்தி அத்துகோரள,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) பொலன்னறுவை மாவட்டத்தில் —

      (i) காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் தேசிய வனப் பூங்காக்கள் மற்றும் வன ஒதுக்கங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      (iii) யானை கொரிடோக்கள் இருப்பின், அவை அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

      (iv) யானை கொரிடோக்களுக்கு குறுக்கே கிராமங்கள் அல்லது மக்கள் குடியிருப்புப் பகுதிகள் இருப்பின், அவை யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை மாவட்டத்தில் யானை - மனிதன் மோதல் காரணமாக —

      (i) உயிரிழந்த ஆட்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை பிரதேச செயலகப் பிரிவு வாரியாக எவ்வளவென்பதையும்;

      (ii) சேதமடைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கையானது வருட வாரியாக எவ்வளவென்பதையும்;

      (iii) உயிரிழந்த மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு செலுத்தப்பட்டு்ள்ள இழப்பீட்டுத் தொகை ஒவ்வொரு நபர் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) மாவட்டத்தில் யானை - மனிதன் மோதலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் யாவை என்பதை மேலும் அவர் இச் சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ அமரகீர்த்தி அதுகோரள, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks