E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0761/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.

    1. 761/2020

      கௌரவ வடிவேல் சுரேஷ்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பதுளை டிப்போவினால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பதுளையிலிருந்து தெமோதர ஊடாக வேவெல்ஹின்ன வரை, பதுளையிலிருந்து மடுல்சீமை குருவிகொல்ல ஊடாக கொக்காகல வரை, பதுளையிலிருந்து ரொக்கதென்ன வரை மற்றும் பதுளையிலிருந்து ரொசட் வரையுமான பஸ் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

      (ii) இதன் காரணமாக தோட்டப்புறப் பிரதேசங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக பதுளை நகருக்குச் செல்லும் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;

      (ii) அச்சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்க்கும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-06

கேட்டவர்

கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-06

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks