பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
776/2020
கௌரவ சமன்பிரிய ஹேரத்,— கல்வி அமைச்சரை கேட்பதற்கு,—
(அ) (i) குளியாப்பிட்டி தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள தேசிய கால்நடை வளங்கள் சபைக்குச் சொந்தமான நாரங்கல்ல தோட்டத்திற்குரிய காணியொன்றில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தொழில்நுட்பப் பீடமொன்றை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது என்பதையும்;
(ii) இந்தத் தொழில்நுட்பப் பீடத்தை ஆரம்பிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட காணி தற்போது காடுபடர்ந்து காணப்படுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி தொழில்நுட்பப் பீடம் ஆரம்பிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் யாது என்பதையும்;
(ii) தொழில்நுட்பப் பீடம் இதுவரை ஆரம்பிக்கப்படாமைக்கான காரணம் யாது என்பதையும்;
(iii) மேற்படி அடிக்கல் நாட்டும் வைபவத்திற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;
(iv) இதற்கென ஒதுக்கப்பட்ட காணி இன்றளவில் கல்வி அமைச்சுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-04
கேட்டவர்
கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-04
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks