பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
802/2020
கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம் எனும் பெயரில் பாடசாலையொன்று அமைந்துள்ளதென்பதையும்;
(ii) அப்பாடசாலைக்கு புதியதோர் கேட்போர் கூடத்தை அமைப்பதற்கு 2018 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டதென்பதையும்;
(iii) ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்படாத காரணத்தால் கேட்போர் கூடத்தின் நிருமாணப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கேட்போர் கூடத்தை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கீட்டினை மேற்கொண்ட அமைச்சு யாதென்பதையும்;
(ii) மேற்படி ஒதுக்கீட்டினை விடுவிக்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணியை முழுமையாக நிறைவுசெய்வதற்கு தேவையான பணத்தொகை எவ்வளவென்பதையும்,
' (ii) இவ்விடயத்திற்கு நிதி ஒதுக்கீட்டினை மேற்கொள்ளும் திகதி யாதென்பதையும்;
(iii) அதன் நிர்மாணப் பணியை பூர்த்திசெய்து அதனை மாணவர்களின் பாவனைக்கு வழங்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-11-16
கேட்டவர்
கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks