பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
880/2020
கெளரவ (கலாநிதி) சுரேன் ராகவன்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "கம்பெரலிய" என்ற பெயரில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமொன்றை மேற்கொண்டிருந்ததா என்பதையும்;
(ii) மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நோக்கங்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதி யாதென்பதையும்;
(iv) மேற்படி வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டதொகை எவ்வளவென்பதையும்;
(v) அத்திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(vi) மேற்படி ஒவ்வொரு கருத்திட்டத்திற்காகவும் செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(vii) "கம்பெரலிய" திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் அத்திட்டத்திற்குரியதாக சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கும் அவரது பணியாட்டொகுதிக்கும் மேற்கொள்ளப்பட்ட செலவினம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) "கம்பெரலிய" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு கருத்திட்டத்தின் மூலமும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் நிறைவேறியுள்ளன என்பதை தொடர்புடைய பிரதேச செயலாளர்களால் உறுதிப்படுத்த முடியுமா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-10
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-10
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks