பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
881/2020
கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வருடாந்த மீன் தேவை எவ்வளவென்பதையும்;
(ii) அத்தேவையில் உள்நாட்டு ரீதியாக உற்பத்தி செய்யப்படுகின்ற அளவு மற்றும் இறக்குமதி செய்யப்படுகின்ற அளவு தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iii) 1982 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட மீன் உற்பத்தியானது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;
(iv) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய யுத்த நிலைமை முடிவடைந்து தற்போது 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் 1982 ஆம் ஆண்டு அம்மாகாணங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற மீன் அறுவடை இன்னும் கிடைக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) வட மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ள பிரதேசங்களில் இதுவரை மீன்பிடித் துறைமுகங்கள் நிர்மாணிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) கடந்த 15 வருட காலப்பகுதியில் ஏனைய மாகாணங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்திற்கான நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;
(iv) இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கிடைத்த உதவியின் தன்மை மற்றும் அந்த உதவிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(v) நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் வழங்கும் கடன் தொகைகளைக் கொண்டு இத்துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(vi) அதன்மூலம் கிடைக்கப்படும் மேலதிக அனுகூலங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-08
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பா.உ.
அமைச்சு
கடற்றொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-11-15
பதில் அளித்தார்
கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks