E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0938/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

    1. 938/2020

      கௌரவ முஜிபுர் ரஹுமான்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் "அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை" என்ற பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டதென்பதையும்;

      (ii) அத்திட்டத்தின் கீழ் கொழும்பு கல்வி வலயத்தில் அமைந்துள்ள சுசமயவர்தன வித்தியாலயம், புனித அந்தோனியார் ஆண்கள் வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயம், அனுருத்த மகளிர் வித்தியாலயம், புனித அந்தோனியார் மகளிர் வித்தியாலயம் (ஆரம்ப பிரிவு), முத்துவெல்ல இந்து வித்தியாலயம் மற்றும் கொ/முகத்துவாரம் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;

      (iii) அப்பணிக்காக கடந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கப்பட்டதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு - 12, ஹமீத் அல் ஹுசைனி வித்தியாலயத்தில் கட்டிடமொன்றை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) அது தொடர்பாக எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ)     (i)          இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) மேலே அ (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளின் கட்டிட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் மேலும் குறிப்பிடுவாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-03-12

கேட்டவர்

கௌரவ முஜிபுர் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-11-15

பதில் அளித்தார்

கௌரவ பியல் நிசாந்த த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks