பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1742/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 யூலை முதல் இற்றை வரை மாதாந்த/ வருட வாரியாக,
(i) அரிசியின் மொத்த நுகர்வு மற்றும் தலா நுகர்வையும்;
(ii) சிறுபோகம் மற்றும் பெரும் போகங்களின் போது அரிசியின் உள்ளூர் மொத்த உற்பத்தி மற்றும் தலா உற்பத்தியை வெவ்வேறாகவும்;
(iii) இறக்குமதிசெய்யப்படும் அரிசியின் அளவையும்;
(iv) இறக்குமதிசெய்யப்படும் அரிசியின் பெறுமதியையும்;
(v) அரசாங்கத்தினால் அரிசி இறக்குமதியாளர்கள், நெற்பயிற்செய்கையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உண்மையான மானியத்தை ஒப்புறுதிப்படுத்தும் சான்றுகளுடனும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) இலங்கையில் 2010 மற்றும் 2011 ஆகிய வருடங்களில் ஒரு கிலோகிராம் அரிசிக்கான உற்பத்திச் செலவையும்;
(ii) நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கையையும்;
(iii) இறக்குமதிசெய்யப்பட்ட மற்றும் உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் அரிசிக்கு விதிக்கப்பட்ட சகல (நேரடி மற்றும் மறைமுகமான) வரிகளையும்
அவர் வெவ்வேறாகக் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-05-23
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-01-24
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks