பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1921/ ’11
கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— கைத்தொழில், வாணிப அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) குருநாகல் மாவட்டத்தில் பன்னல, மாகந்துர கைத்தொழில் பேட்டையில் முதலீட்டுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ‘சொசேஜஸ்’ தொழிற்சாலை ஒன்று உள்ளதென்பதையும்;
(ii) அங்கு ‘சொசேஜஸ்’ உற்பத்திக்காக காலாவதியான இறைச்சி பயன்படுத்தப்படுகின்றதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) ‘சொசேஜஸ்’ உற்பத்திக்காக குறித்த தொழிற்சாலைக்கு கோழி இறைச்சி இறக்குமதி செய்யப்படுகின்ற நாடுகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ‘சொசேஜஸ்’ வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்ற நாடுகள் யாவை என்பதையும்;
(iii) உள்நாட்டு சந்தையில் மேற்படி உற்பத்திகளை விநியோகிக்கின்ற மற்றும் சந்தைப்படுத்துகின்ற கம்பனிகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மாகந்துர தொழிற்சாலையில் ‘சொசேஜஸ்’ உற்பத்தியின்போது காலாவதியான “ரெக்ஸ்டர்ட் சோயா புறோட்டீன்” எனப்படும் மூலப்பொருள் பயன்படுத்தப் பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி தொழிற்சாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான குறித்த மூலப்பொருட்களின் அளவு யாதென்பதையும்;
(iii) மேற்படி தொழிற்சாலையில் இலச்சினை பொறிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்ட நிலையில் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான ‘சொசேஜஸ்’களின் நிறை எத்தனை கிலோ கிராம் என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் விதத்தில் ‘சொசேஜஸ்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-01-17
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
கைத்தொழில், வாணிப
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks