பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1923/ ’11
கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெங்குப் பயிர்ச்செய்கைச் சபையின் கீழுள்ள தெங்கு நாற்றுமேடைகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி நாற்றுமேடைகளுக்கான விதை தேங்காய்கள் தெரிவுசெய்யப்பட்ட தாய் மரங்களிலிருந்து பெறப்படுகிறன்தா என்பதையும்;
(iii) அவ்வாறாயின் தாய்மரங்களின் எண்ணிக்கை மற்றும் தாய்மரங்கள் காணப்படும் தோட்டங்களின் எண்ணிக்கை தென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) மேற்குறிப்பிட்ட தெங்கு நாற்றுமேடைகளிலிருந்து,
(i) 2010ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சிறுபோகத்திலும் பெரும்போகத்திலும் வழங்கப்பட்ட தென்னங் கன்றுகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) தெங்கு ஆராய்ச்சி சபையின் கீழுள்ள காணிகளின் அளவு எத்தனை ஏக்கர் என்பதையும்;
(ii) தெங்கு ஆராய்ச்சி சபையினால் 2010ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ள தென்னங் கன்றுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) விதை தேங்காய் நாற்றுமேடையிடப்படும் நடைமுறை யாதென்பதையும்;
(iv) தெங்கு ஆராய்ச்சி சபை விதை தேங்காய்களைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி நிறுவனங்கள் 2009/2010 ஆண்டுகளில் வழங்கியுள்ள விதை தேங்காய்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) மேற்படி விதை தேங்காய்கள் செழிப்பான தாய்மரங்களிலிருந்து பெறப்படவில்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(vii) ஆமெனின், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-01-18
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks