பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1960/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— உயர் கல்வி அமைச்சரைக்கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் இதுவரை பாதுகாப்பு அலுவல்களில் ஈடுபட்ட கம்பனியுடனான உடன்படிக்கை உரிய காலத்துக்கு முன்னரே இரத்துச் செய்யப்பட்டு இவர்களிடமிருந்து சேவையைப் பெறுதல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) மேற்படி பாதுகாப்பு சேவையை வழங்கல் வேறு பல தனியார் கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள புதிய கம்பனிகளின் பெயர்கள் யாவை;
(ii) மேற்படி ஒவ்வொரு கம்பனியினதும் உரிமையாளர்களது பெயர்கள் வெவ்வேறாக யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள புதிய கம்பனிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒப்படைக்கப்படுகின்றபோது கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டதா;
(ii) அவ்வாறாயின், கேள்விப் பத்திரங்களை முன்வைத்த கம்பனிகளின் பெயர்கள் யாவை;
(iii) கேள்விப் பத்திரங்கள் கோரப்படாவிடின் அதற்கான காரணங்கள் யாவை;
(iv) பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இருக்க வேண்டிய ஆகக்குறைந்த தகைமைகள் மற்றும் இவர்களுக்கு கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-21
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks