பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2027/ ’11
கெளரவ சஜித் பிரேமதாச,— சிறுவர் அபிவிருத்தி மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்டபதற்கு,—
(அ) (i) தற்போது முறைசாரா மற்றும் தவறான வழிகளில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வீட்டுப் பணிகள் , சிறு பிள்ளைகளைப் பேணல், மற்றும் வீட்டுத் தோட்டப் பராமரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபடுத்தப்படுவதையும்;
(ii) இவ்வாறு பணியில் ஈடுபடும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதையும்
அவர் ஏற்றுக் கொள்வாரா?
(ஆ) (i) மேற்கூறியவாறு சிறுவர்கள், மற்றும் பெண்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவதை ஒழிக்கும் பொருட்டும், ஊழியர்கள் மற்றும் தொழில் வழங்குனர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் நன்மையாக அமையும் பொருட்டும், மேற்கூறிய தொழில்களை எதிர்பார்ப்பவர்களை பதிவு செய்யக்கூடியவாறான முறைசார்ந்த முறையியலொன்றுடன் கூடிய நிறுவனமொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) தாபிக்கப்படும் அவ்வாறான நிறுவனமொன்றில் பதிவு செய்யப்பட்டவர் களுக்கு மாத்திரம் மேலே (அ) i இல் குறிப்பிட்டவாறான தொழில்களை முறைசார்ந்த விதத்தில் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-03
கேட்டவர்
கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-10-25
பதில் அளித்தார்
கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks