பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0386/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 386/2023
      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) ​​(i) இலங்கைக்குத் தனித்துவமான, அரிதான மற்றும் அழிவடையும் ஆபத்திலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணு பாகங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதில் ஈடுபடுகின்ற வெளிநாட்டவர்கள் உள்ளனர் என்பதையும்;
      (ii) இவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து விதிக்கப்படும் தண்டப் பணத்தை செலுத்திய பின்னர் இலகுவாக இலங்கையை விட்டு வெளியேற இவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளதா என்பதையும்;
      (iii) இவர்கள் அடிக்கடி இலங்கைக்கு வருகை தந்து மேற்படி விடயத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளனவா என்பதையும்;
      (iv) மேற்படி நடவடிக்கையில் ஒழுங்கமைந்த வகையில் ஈடுபட்டுள்ள நபர்களை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) (i) இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு போதுமான எண்ணிக்கையிலான வனவிலங்கு உத்தியோகத்தர்கள் உள்ளனரா என்பதையும்;
      (ii) இன்றேல் மேற்படி உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு வழிமுறையொன்று உள்ளதா என்பதையும்;
      (iii) இலங்கையின் காடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டவர் களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;
      (iv) அவ்வாறாயின், அவ் வேலைத்திட்டம் யாதென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks