பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0389/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 389/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கண்டி – மாத்தளை புகையிரதப் பாதையில், வத்தேகம புகையிரத நிலையத்துக்கு இருபக்கமாக வருகைதரும் புகையிரதங்கள் மாறுவதற்கான இருவழிப்பாதைகள் காணப்படாமையால் மேற்படி புகையிரத நிலையத்துக்கு வருகைதரும் புகையிரதங்களை அதிக நேரம் நிறுத்தி வைக்கவேண்டிய நிலைமை ஏற்படுவதன் காரணமாக பயணிகள் பாரிய அசெளகரியங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) இன்றளவில் ஒருவழிப்பாதையாக மாத்திரம் காணப்படுகின்ற கண்டி – மாத்தளை புகையிரதப் பாதையை இருவழி புகையிரதப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கான இயலுமை காணப்படுகின்றதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அது தொடர்பில் சாத்தியவள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) அதற்குச் செலவாகும் தொகை எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks