பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0390/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 390/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1841 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க அலைந்து திரிவோர் கட்டளைச் சட்டத்தின் 3(அ) பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் 40 ஆம் பிரிவுக்கு அமைய, யாசகம் கேட்டல் சட்டவிரோதமானது என்பதையும்;

      (ii) நாட்டிலுள்ள ஏனைய நகரங்களைப் போன்றே, கண்டி நகரின் பொது இடங்களிலும் பாதசாரி நடைப் பாதைகளிலும் யாசகம் கேட்பவர்களைக் காணக் கூடியதாக இருப்பதோடு, இவர்களுக்கு மத்தியில் சிறு பிள்ளைகளைக் கையில் சுமந்தவண்ணம் பெண்களும் உள்ளனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) அந்தப் பெண்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளனரா மற்றும் இவர்கள் வைத்திருக்கும் பிள்ளைகளின் கடும் உறக்கத்திற்கு, அந்தப் பிள்ளைகளுக்கும் போதைப் பொருள் கொடுக்கப்பட்டுள்ளமை காரணமா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) இந்தப் பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வியைப் புகட்ட வாய்ப்பு உள்ளதா என்பதையும்;

      (iii) நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவைகள் திணைக்களத்தால் இந்தப் பிள்ளைகளைப் பின்தொடர்ந்து ஆராயும் வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) யாசகர்களுக்கென குடியிருப்புத் தொகுதி ஒன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-30

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks