E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0423/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 423/2023

      கௌரவ கயந்த கருணாதிலக்க,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மின்சாரப் பட்டியல்களுக்கான செலவுகளைக் குறைப்பதன் நோக்கத்துடன் அரச ஊழியர்கள் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 'சூரிய மின்சக்தி வசதிக்கான விசேட கடன் திட்டம்' நடைமுறையிலுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

      (iii) அக்கடன் திட்டத்தின் கீழ் அரச ஊழியர் ஒருவருக்கு வழங்குவதற்காக உத்தேசித்துள்ள கடன் தொகை மற்றும் அதற்குரிய வட்டி வீதம் என்பன யாவையென்பதையும்;

      (iv) அக்கடன் திட்டத்தின் கீழ் இன்றளவில் கடன் வழங்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை என்பன யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-09-07

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-08

பதில் அளித்தார்

கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks